மருத்துவமனையின் தேவதையே

அன்று எமனோடு போராடினால் ஒரு பெண்!

தன் கணவனுக்காய்………ஒரு முறை…..புராணத்தில்

நீயோ நித்தமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றாய்….

முன் பின் தெரியாதவர்களுக்காய்

பலமுறை….நிஜத்தில்

யார் கூறியது இன்றும் தீண்டாமை தழைக்கிறது என்று?

பாவம் அவர்கள் உங்களை கண்டதில்லை போல…….

தொற்றும் நோயோ ? தொற்றா நோயோ ? தொட்டுதவி தொண்டு செய்யும் உன் உள்ளத்தில் என்றும் தீண்டாமை இருப்பதில்லையே ………

உன் துக்கத்தை மறைத்து உன் தூக்கத்தை தூரமாக்கி நோயாளின் நலனை மட்டுமே உறுதுணையாக்கி…

அரவணைப்போடு வாழும் நீங்கள் என்றுமே அன்னை தெரசாவின் அடிச்சுவடுதான் (மறு உருவம் தான்)

உங்கள் அர்ப்பணிப்பு கண்டு அன்னை தெரசாவும் கூட ஆச்சரியப்படுவார் !.

உங்கள் பொறுமை கண்டு பூமி தாயும் கூட நிமிர்ந்து பார்ப்பாள்!

உங்கள் சகிப்பு தன்மை முன்பு பெற்றவளும் கூட தோற்றுப்போவாள்!

 

 

Ms. Sushetha
Pharmacist, Heart city

1win