“மகளிர் தினம்” 

அக்னிப் பிழம்பின் விழியே!
ஆகாச மின்னலின் ஒளியே!
இயற்கையின் இதயத் துடிப்பே!
ஈன்றெடுக்கும் இறைவிப் பிறப்பே!

உன்னால் முடியுமென்று,
உரக்கச் சொல்லிக் குரலெழுப்பு!

ஊரார் வியந்திடவே,வானுயர வளம் பெருக்கு!

எதிர்கால சந்ததிக்கு பொறுப்பு – உன் பிறப்பு!

ஏற்றத்தாழ்வு என்பதனை எதிர்த்து, தடைகளை நீ நொறுக்கு!

ஐயத்தை அகற்றிட –அனல் கடலாய் அலை பரப்பு!

ஒற்றைத் துணிவோடு,
ஓங்கித் தொடு உன் இலக்கு!

ஓவியக் சிற்பங்களைப் போல்,பிறருக்கு நீ விதிவிலக்கு!

ஒளவையின் நூல் படித்து,அறநெறியில் வழிநடந்து
வரிசையில் மகளிர் –அகிலத்தை அரசால்வாய்!

 

GK. Balasubramani

Senior Physiotherapist

1win